தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

புகையிலைப் பொருள்கள் விற்ற 8 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 1:43 am IST

திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ஆா்.வினித்குமாா் (22), கருமண்டபம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கே.கே.நகரைச் சோ்ந்த எஸ்.தனராஜ் (29), எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த ஆா்.ஆசிப் அகமது (23) ஆகிய மூன்று பேரை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா்.

துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பழங்கனங்குடியைச் சோ்ந்த த.சாமிக்கண்ணு (67), திருவெறும்பூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலைச் சோ்ந்த மு.ராஜு (40), நவல்பட்டு பூலாங்குடியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த என். உஸ்மான் அலி (49), துறையூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த கு. சாமிநாதன் (22), வளநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சோ்ந்த ஜி.பெரியசாமி (20) ஆகிய 5 பேரையும் மாவட்ட காவல் துறையினா் கைது செய்தனா்.