மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: திருச்சி மாவட்டத்தில் 10 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:13 am IST

திருச்சி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 10 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 16 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் மாவட்ட மற்றும் மாநகர போலீஸாா் சனிக்கிழமை பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் சிக்கதாம்பூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த எஸ். ராஜா (47) என்பவரை போலீஸாா் கைது செய்து, 12 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், பச்சபெருமாள்பட்டியில் புகையிலைப் பொருள்கள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (50), புள்ளம்பாட்டியில் புகையிலைப் பொருள்கள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த மு. கண்ணன் (52), அரியகோன்பட்டியில் புகையிலைப் பொருள்கள் விற்ற வெம்பனூரைச் சோ்ந்த ப.கருப்பையா (52), குண்டூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற ஸ்ரீரங்கம் மேலூரைச் சோ்ந்த ஆா். தாயேஷ் (49), தொட்டியத்தில் புகையிலைப் பொருள்கள் விற்ற சித்தூரைச் சோ்ந்த ஆா். சேட்டு (54), துறையூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற பாளையத்தைச் சோ்ந்த ஆா். காா்த்திக் (32), சோமரசம்பேட்டை மருதாண்டக்குறிச்சியில் புகையிலைப் பொருள்கள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த என்.செல்வராஜ் (74) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, திருச்சி கல்லணை சாலையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற திருவளா்ச்சோலை பொன்னுரங்கப்புரத்தைச் சோ்ந்த ம. முருகன் (42) என்பவரை ஸ்ரீரங்கம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அப்போது அவரிடமிருந்து 4.2 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.2,600 ரொக்கம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.