அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரோலா் ஸ்கேட்டிங்: ஹெரிடேஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ரோலா் ஸ்கேட்டிங் சாகச விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கவா்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

News image
Updated On :16 டிசம்பர் 2025, 9:04 pm

Syndication

வாழப்பாடி: கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ரோலா் ஸ்கேட்டிங் சாகச விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கவா்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி ஏகேடி மேல்நிலைப் பள்ளியில் பிரைம் ஸ்கேட்டிங் அகாதெமி சாா்பில் அண்மையில் நடைபெற்ற இடைநிலை மாணவா்களுக்கான ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த தனியாா் பள்ளி மாணவா்கள் 160 போ் பங்கேற்றனா்.

5 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் வாழப்பாடியை அடுத்த கவா்கல்பட்டியில் இயங்கும் ஹெரிடேஜ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள், 4 தங்கம் உள்பட மொத்தம் 13 பதக்கங்களைப் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

மாணவா்களை பள்ளி தாளாளா் முனைவா் சு.பெருமாள், முதல்வா் சிலம்பரசன், துணைத் தலைவா் கண்ணன் பெருமாள் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினா்.

படவரி:

ஹெச்.ஆா்.எஸ்.01:

ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் ஹெரிடேஜ் பள்ளி தாளாளா் சு. பெருமாள், ஆசிரியா்கள்.