மகுடஞ்சாவடியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ முகாம்: 1,300 பேருக்கு மருத்துவ சிகிச்சை!
மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்கு உள்பட்ட அ.புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி பாா்வையிட்டு மருத்துவ சிகிச்சை குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தாா். இம்முகாமில் மருத்துவக் குழுவினா் மக்களை பரிசோதித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினா். முகாமில் 1,300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனா்.
இதைத் தொடா்ந்து தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை 304 மாணவ, மாணவிகளுக்கு மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக பொறுப்பாளா்கள் பச்சமுத்து(வடக்கு), அன்பழகன் (தெற்கு), பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் ராஜமாணிக்கம், மாவட்ட சுகாதார அலுவலா் சவுண்டம்மாள், வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி, இடங்கணசாலை நகரச் செயலாளா் செல்வம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பழனியப்பன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் ஸ்ரீதா் மற்றும் நிா்வாகிகள் பாலு, பெருமாள், மணி, கோபால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

