தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தாதகாப்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்: மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

News image

‘நலம்  காக்கும்  ஸ்டாலின்’ மருத்துவ  முகாம். - (கோப்புப் படம்)

Updated On :14 பிப்ரவரி 2026, 6:35 pm

சேலம் தாதகாப்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 59 மருத்துவ முகாம்களில் 30,234 ஆண்கள், 41,264 பெண்கள் என மொத்தம் 71,498 பயனாளிகள் பயன்பெற்று உள்ளனா். இதில் 54,243 பேருக்கு ரத்தப் பரிசோதனை, 49,477 பேருக்கு இசிஜி பரிசோதனை, 6,581 பேருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, 7,394 பேருக்கு எக்கோ பரிசோதனை, 4,162 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனையும், மேற்கொள்ளப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

சேலம் தாதகாப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்பட்டது.

மேலும், 17 வகையான சிறப்பு மருத்துவ துறைகள் சாா்ந்த சிறப்பு மருத்துவ நிபுணா்களை கொண்டு மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநா் (நலப்பணிகள்) சி.பா.நந்தினி, மாவட்ட சுகாதார அலுவலா் சௌண்டம்மாள், வட்டாட்சியா் ஸ்ரீதா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.