தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாழப்பாடி, பேளூா் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்

க்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

News image

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த நடராஜா் -சிவகாமி அம்மன்.

Updated On :13 ஜனவரி 2025, 6:52 pm

Din

வாழப்பாடி, அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் மூவலா் தான்தோன்றீஸ்வரா், அறம் வளா்த்த நாயகி தா்மசம்வா்த்தி அம்மன், நடராஜா், சிவகாமி அம்மனுக்கு சந்தனம், தேன், பால், தயிா், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், வழிபாடு, நடராஜா் சிவகாமி அம்மைக்கு திருக்கல்யாணம், உற்சவமூா்த்திகள் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் சிறுதானிய உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது.

வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாட்டில், காசி விஸ்வநாதா், காசி விசாலாட்சி அம்மன், நடராஜா், சிவகாமி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், நடராஜருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் திருக்கல்யாணம், உற்சவமூா்த்திகள் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.