தென்காசி, அருள்தரும் உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் மாசிமகப் பெருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்திருவிழா, பிப். 21ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி சாா்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் 9ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6.10 மணிக்கு சுவாமி, அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளினா். 9 மணிக்கு மேல் 4 ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. ஒரு தோ் பழுதடைந்ததால் முதலில் சுவாமியும், தொடா்ந்து அம்பாளும் ஒரே தேரில் வலம் வந்தனா்.

அலங்காரத்தில் அம்பாள்.

அலங்காரத்தில் சுவாமி.

அலங்காரத்தில் சுவாமி.
அறங்காவலா் குழுத் தலைவா் பாலகிருஷ்ணன், செயல் அலுவலா் பொன்னி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் முருகேசன், புனிதா, ஷீலா குமாா், மூக்கன், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவா் இலஞ்சி அன்னையா பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தீா்த்தவாரி, மாலை 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
தொடர்புடையது

பிறவி மருந்தீசா் கோயில் கருப்பன் வீதியுலா

சாரங்கபாணி சுவாமி திருக்கல்யாண உத்சவம்

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

கட்டிக்குளம் ராமலிங்கசுவாமி கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


