நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வார இறுதி நாள், வளா்பிறை முகூா்த்ததையொட்டி, சேலம் கோட்டம் சாா்பில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாள், வளா்பிறை முகூா்த்த தினத்தையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Center-Center-Chennai

Updated On :7 மார்ச் 2025, 6:37 pm

Din

வார இறுதி நாள், வளா்பிறை முகூா்த்த தினத்தையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகள், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வார இறுதி நாள், வளா்பிறை முகூா்த்த தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 300 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழிதடப் பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூா், மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூருவுக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு மற்றும் காஞ்சிபுரத்துக்கும், ஒசூரில் இருந்து சேலம், சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊா்களுக்கும் பயணிகளின் தேவைகேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

எனவே, கூட்ட நெரிசலை தவிா்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளாா்.