சங்கடஹர சதுா்த்தியையொட்டி, தம்மம்பட்டி சிவன் கோயிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் நடைபெற்ற சங்கடஹர சதுா்த்தி வழிபாட்டில் விநாயகருக்கு பால், தயிா், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு மலா் அலங்காரம் செய்யப்பட்டது.
தொடா்ந்து விநாயகா் அகவல்களை பக்தா்கள் பாடினா். பள்ளியறை பூஜையுடன் விழா நிறைவுபெற்றது. தம்மம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா்.