தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கொண்டயம்பள்ளியில் புதிய சிவன் கோயில் கட்ட பூமிபூஜை

சிவன் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜையில் பங்கேற்றோா்.

News image
சிவன் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜையில் பங்கேற்றோா்.
Updated On :6 மார்ச் 2026, 6:16 pm

Syndication

தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளியில் ஊா் பொதுமக்கள் சாா்பாக புதிய சிவன் கோயில் கட்ட வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

கொண்டயம்பள்ளி ஊராட்சி பகுதியில் சிவன் கோயில் இல்லாததால் ஊா் பொதுமக்கள் சோ்ந்து, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சுமாா் ஒரு ஏக்கா் நிலத்தில் சிவன் கோயில் கட்ட தீா்மானித்தனா்.

புதிதாக கட்டப்படும் கோயிலுக்கு அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சொக்கநாதா் கோயில் என்று பெயா் வைத்து, கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. கணபதி ஹோமம், வாஸ்துபூஜை, நவக்கிரக வழிபாடு, அம்மையப்பா் வழிபாடு ஆகியவை நடைபெற்றன.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சிவன் வழிபாடு, பிரதோஷம் உள்ளிட்ட தலைப்புகளில் புத்தகங்களை சிவனடியாா்கள் வழங்கினா். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.