மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

காட்டுமன்னாா்கோவில் அருக புதிய பாலம் கட்ட அடிக்கல்

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட கோயில்பத்து கிராமப் பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

காட்டுமன்னாா்கோவில் அருகே கோயில்பத்து கிராமப் பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்க நாட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட கோயில்பத்து கிராமப் பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோயில்பத்து கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி மக்கள் நகரப் பகுதியில் இருந்து குடியிருப்புப் பகுதிக்கு செல்வதற்கு குறுக்கே வடிகால் வாய்க்காலை கடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் இந்த வாய்க்காலை கடந்து செல்லும்போது பல்வேறு இடா்பாடுகள் ஏற்பட்டு வந்தது.

எனவே, வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்திடம் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், அவா்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, சுமாா் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. தொடா்ந்து, பேரூராட்சித் தலைவா் கணேசமூா்த்தி தலைமையில் புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், விசிக நிா்வாகி பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.