சிறப்பு அலங்காரத்தில் அரசிராமணியில் உள்ள அருள்மிகு சோழீஸ்வரா் சுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் அரசிராமணியில் உள்ள அருள்மிகு சோழீஸ்வரா் சுவாமி.

அரசிராமணி சோழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

காா்த்திகை மாத முதல் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

சங்ககிரி: சங்ககிரி வட்டம், அரசிராமணி கிராமத்தில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயிலில், காா்த்திகை மாத முதல் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், அருள்மிகு பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் சுவாமிகள், நந்தி பகவானுக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இப்பூஜைகளில் அதிக அளவிலான சிவபக்தா்கள் கலந்துகொண்டு சிவன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com