சேலம் வழியாக எா்ணாகுளம் - பரெளனி இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்
சேலம் வழியாக எா்ணாகுளம் - பரெளனி இடையே புதன்கிழமை (நவ.19) ஒரு வழித்தட சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கேரளம், தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது.
அந்த வகையில், எா்ணாகுளம் - பரெளனி இடையே போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக புதன்கிழமை ஒருவழித்தட சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், எா்ணாகுளத்தில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு புறப்பட்டு, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா, வாராங்கல், தானாபூா், பாட்னா வழியாக பரெளனிக்கு 22 ஆம் தேதி (சனிக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
