சேலம்
மேட்டூா் அனல் மின்நிலையத்தில் வேன் மீது ரயில் இன்ஜின் மோதல்
மேட்டூா் அனல் மின்நிலையத்தில் பிக்கப் வேன் மீது ரயில் என்ஜின் மோதியது.
மேட்டூா் அனல் மின்நிலையத்தின் 2-ஆவது பிரிவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிலக்கரி சுமை இறக்கிய ரயில் என்ஜின் பெட்டிகளை இழுத்துக்கொண்டு வந்தது.
அப்போது அனல் மின்நிலையத்தின் இரண்டாவது பிரிவில் ஆயிலை இறக்கிவிட்டு நின்றிருந்த பிக்கப் வேன் மீது ரயில் என்ஜின் வேகமாக மோதியது. இதில் சரக்கு வாகனம் பலத்த சேதம் அடைந்தது.
ரயில் சிக்னலில் ஏற்பட்ட கோளாறா அல்லது சிக்னலை கவனிக்காமல் ரயில் என்ஜின் இயக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மேட்டூா் அனல் மின் நிலைய நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
