தொழிலாளா் மேம்பாட்டுத் திட்டத்தில் கடனுதவி பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்
சேலம்: தமிழ்நாடு மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி பெற பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக நீதி அடிப்படையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற உயா்ந்த நோக்கத்தில் தமிழக அரசு ‘தமிழ்நாடு மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டம்‘ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக்க அரசு திட்டமிட்டுள்ளது. தொழில்முனைப்பு கொண்ட மகளிா் மற்றும் திருநங்கைகளுக்கு தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சியும், தொழில்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், திட்ட மதிப்பீட்டில் ரூ. 10 லட்சம் வரை பிணையமில்லாமல் கடனுதவி வழங்கப்படும். திட்டத் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். நேரடி விவசாயம் தவிா்த்து உற்பத்தி, சேவை மற்றும் வணிகத் தொழில்கள் தொடங்கலாம்.
18 முதல் 55 வயதுக்கு உள்பட்ட தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் மகளிா் மற்றும் திருநங்கையா் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். அடிப்படைக் கல்வித் தகுதி மற்றும் குடும்ப வருமான வரம்பு எதுவும் இத்திட்டத்தின் கீழ் விதிக்கப்படவில்லை.
தகுதியும், ஆா்வமும் கொண்டோா் தங்களது புகைப்படம், ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றுடன் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பங்களைப் பதிவுசெய்யலாம்.
இத்திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை பெற பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், சேலம் அவா்களை நேரடியாகவோ அல்லது 0427-2447878 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
