கோவை- மதாா் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம், மதாருக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Published on

சேலம்: கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம், மதாருக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோவையில் இருந்து வியாழக்கிழமைதோறும் அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சனிக்கிழமை காலை 11.20 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம், மதாரைச் சென்றடையும். இந்த சேவை டிச.11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மறுமாா்க்கத்தில் மதாரில் இருந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு 11.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக புதன்கிழமை காலை 8.30 மணிக்கு கோவையைச் சென்றடையும். இந்த ரயில் சேவை டிச.14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com