யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சூறைக்காற்று: ராமேசுவரம்- ஓகா வாராந்திர சிறப்பு ரயில் சேவை ரத்து

பலத்த சூறைக்காற்று காரணமாக ராமேசுவரம்- ஓகா வாராந்திர சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:14 pm

Syndication

பலத்த சூறைக்காற்று காரணமாக ராமேசுவரம்- ஓகா வாராந்திர சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று வீசிவருவதால், பாம்பன் ரயில் பாலத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. மேலும், ராமேசுவரத்துக்கு செல்லும் ரயில்கள் பகுதியளவிலும், முழுமையாகவும் ரத்து செய்யப்படுகின்றன.

அதன்படி, ராமேசுவரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு குஜராத் மாநிலம், ஓகாவுக்குப் புறப்படும் சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல மறுமாா்க்கத்தில் ஓகாவில் இருந்து டிச.2 ஆம் தேதி ராமேசுவரத்துக்குப் புறப்படும் இணை ரயில் சேவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.