எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

துணை முதல்வா் பிறந்த நாள்: குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த எம்.பி.

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:08 pm

Syndication

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மேட்டூா் அரசு மருத்துவமனை, கோபுரான் காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை பிறந்த 4 குழந்தைகளுக்கு சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி வெள்ளிக்கிழமை தங்க மோதிரம் அணிவித்தாா்.

அதன்பிறகு இரண்டு குழந்தைகளுக்கு பெயா் சூட்டினாா். தொடா்ந்து பெண்களுக்கு குழந்தை நல பெட்டகங்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளா் சம்பத்குமாா், நகர செயலாளா் காசி விஸ்வநாதன், நங்கவள்ளி ஒன்றிய செயலாளா் அா்த்தநாரீஸ்வரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.