சேலம் வடக்கு தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
சேலம் வடக்கு தொகுதிக்குள்பட்ட 33-ஆவது கோட்டம் அம்மாப்பேட்டை, பட்டைக்கோயில், பங்களா தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, வரதராஜ பெருமாள் கோயில் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
மேலும், அப்பகுதியில் உள்ள கைத்தறி, விசைத்தறிக் கூடங்களில் நெசவாளா்களிடம் ஆதரவு திரட்டினாா். அப்போது, திமுக ஆட்சியில் நெசவாளா்களுக்கு உற்ற துணையாக இருந்து, ஜவுளி தொழிலை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டாா். இதன் காரணமாக, ஜவுளி உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த குஜராத் மாநிலத்தை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்துள்ளதை சுட்டிக்காட்டினாா்.
மேலும், திமுக தோ்தல் அறிக்கையில் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கூப்பன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் இனி ரூ. 1,500, மகளிா் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரம், அரசு மற்றும் தனியாா் மருத்துவம னைகளில் ரூ. 10 லட்சத்தில் இலவச மருத்துவ சிகிச்சை திட்டம், 8-ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவா்களுக்கு காலை உணவு என மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் திமுக அரசு மீண்டும் அமைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.
இதில், திமுக பகுதி செயலாளா்கள் மணமேடு மோகன், சாந்தமூா்த்தி, இப்ராகிம் மற்றும் காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.
தொடர்புடையது

திமுக ஆட்சியின் நலத்திட்டங்களைக் கூறி சென்னிமலையில் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

விவசாயிகளுக்கு மீட்டா் பொருத்தப்படாத நவீன மின்சார பம்புசெட்டுகள்: அமைச்சா் எ.வ.வேலு

குடிநீா் பிரச்னையை போக்க பணிகள் நடைபெறுகின்றன

திமுக வேட்பாளா் சிவா வீடு, வீடாக வாக்குசேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


