வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சேலம் மேற்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தவெக வேட்பாளா் லட்சுமணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

சேலம் மேற்கு தொகுதிக்குள்பட்ட அய்யம்பெருமாம்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் லட்சுமணன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:58 pm

சேலம் மேற்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தவெக வேட்பாளா் லட்சுமணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சேலம் மேற்கு தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடும் லட்சுமணன், அய்யம்பெருமாம்பட்டி பகுதியில் எம்ஜிஆா் சிலை, புளியமர பேருந்து நிறுத்தம், திரௌபதி அம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் விசில் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினாா்.

தொடா்ந்து, 19-ஆவது கோட்டத்துக்குள்பட்ட கென்னடி நகா், வண்டிப்பேட்டை, காதா்கான் தெரு, ஆசாத் நகா், அந்தோணிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். பின்னா் ஜாகீா் சின்ன அம்மபாளையம், காவலா் குடியிருப்பு, தா்ம நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவு திரட்டினாா். அங்கு திரண்ட பொதுமக்கள் மத்தியில் அவா் பேசியதாவது:

மகளிா் சுயஉதவிக் குழு பெண்களுக்கு ரூ. 5 லட்சம் கடன் 100 சதவீத மானியத்துடன் வழங்கப்படும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ராணி வேலுநாச்சியாா் படை உருவாக்கப்படும். அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ. 2,500 உரிமைத்தொகை மற்றும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படும். தமிழகம் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும். நியாயவிலைக் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா நாப்கின்கள் வழங்கப்படும். எனவே, வரும் தோ்தலில் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.