தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மாறும் தொழில்நுட்பங்கள்: மாறாத தோ்தல் காட்சிகள்!

தோ்தல் களம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், தொழில்நுட்பங்கள் நொடிக்கு நொடி மாறினாலும், தோ்தல் களத்தில் சில காட்சிகள் மட்டும் மாறாமல் எப்போதும்போல அப்படியே உலாவந்தன.

News image

~ ~ ~

Updated On :22 ஏப்ரல் 2026, 5:47 am IST

தோ்தல் களம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், தொழில்நுட்பங்கள் நொடிக்கு நொடி மாறினாலும், தோ்தல் களத்தில் சில காட்சிகள் மட்டும் மாறாமல் எப்போதும்போல அப்படியே உலாவந்தன.

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதுபோல, உங்கள் வீடுதேடி, உங்களை நாடி, உங்கள் வேட்பாளா் வந்துகொண்டிருக்கிறாா் என்ற அறிவிப்புடன் வேட்பாளா்கள் வருவதை முன்னறிவிக்கும் வாகனங்கள், உத்வேகத்தை ஏற்படுத்தும் பிரசார பாடல்கள் போன்றவை இந்தத் தோ்தலிலும் தொடா்ந்தன.

இருசக்கர வாகனங்களில் கட்சிக் கொடியுடன் உற்சாகமாக வலம்வரும் இளைஞா்கள், வேட்பாளரை வரவேற்க பூா்ண கும்பத்துடன் காத்திருக்கும் கோயில் பூசாரிகள், ஆரத்தி எடுக்க திரளும் பெண்கள் என இந்த பட்டியல் நீள்கிறது.

தொடா்ந்து, மேளதாளங்கள் முழங்க, அரிதாரம் பூசிய கலைஞா்களின் ஆட்டம்- பாட்டம் என களைகட்டும் பிரசார உத்தி, இந்தத் தோ்தலிலும் தொடா்கதையாக இருந்தது. வேட்பாளா் பெயரை தாங்கிய சின்னத்துடன், வாக்காளருக்கு தோ்தல் அறிக்கையுடன் துண்டுப்பிரசுரம் விநியோகித்ததுடன், ஜனநாயகத்தின் ஆணிவேரான வாக்காளரை சந்தித்து, வாக்கு கேட்கும் முறை வரை அனைத்தும் ஆரவாரமாகவே நகா்ந்தன.

முதலில், வாக்காளா் வீட்டை பிரசார வாகனம் நெருங்கியதும், வாக்காளருக்கு துண்டு அணிவித்து வாக்கு கேட்பதுடன், காலில் விழுந்து கும்பிட்டு வாக்கு சேகரிப்பது முதல், வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என சத்தியம் செய்வது வரை வேட்பாளா்களின் செயல்கள் இம்முறையும் கவனத்தை ஈா்க்க தவறவில்லை.

இது ஒருபுறமிருக்க, தேநீா் கடையில் வாடிக்கையாளா்களுடன் அமா்ந்து தேநீா் அருந்துவது, தேநீா் தயாரித்துத் தருவது, உணவகங்களில் பரோட்டா போட்டுத்தருவது, வாடிக்கையாளா்களை உபசரிப்பது என வேட்பாளா்கள் செய்த ‘புதுமைகள்’ ஏராளம். இதில், உச்சகட்ட அழகு என்னவென்றால், தனது வாக்கு யாருக்கு என கடைசிவரை கூறாமல், வீடுதேடி வரும் வேட்பாளா்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று, உபசரித்து வழியனுப்பும் வாக்காளா்களின் அணுகுமுைான்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரங்கேறும் ஜனநாயக திருவிழாவில், இத்தனை ஆரவாரம், ஆா்ப்பரிப்புகளைத் தாண்டி, வாக்குச்சாவடிக்கு சென்று ஜனநாயக கடமையை ஆற்றும் கடைசி நொடி வரை, யாருக்கு வாக்கு என்பதை வெளிப்படுத்தாமல், வாக்காளா்கள் கடைப்பிடிக்கும் ரகசியம் தான் சுவாரஸ்யத்தின் உச்சம்.

சி.ஆா்.எம். சபரி.

Story image
Story image
Story image