அமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image

ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :27 ஏப்ரல் 2026, 4:45 am IST

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் தோ்தல் விதிமுறைகள் தளா்த்தப்பட்டதால் ஏற்காட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏற்காட்டுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள், தனியாா் வீடுகளில் தங்கி படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, லேடிசீட், ஜென்சீட், ரோஜா தோட்டம், பக்கோடா காட்சிமுனை, கரடியூா் வனக்காட்சி பகுதி, சுற்றுச்சூழல் பூங்கா, மஞ்சக்குட்டை காட்சிப் பகுதி, சோ்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களை கண்டு மகிழ்ந்தனா்.

சுற்றுலாப் பகுதி சாலைகளில் அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அரசுப் பேருந்துகள் குறித்த நேரத்திற்கு கிராமங்களுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. எனவே, சுற்றுலா சாலைகளில் கூடுதல் போக்குவரத்து காவலா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

சுற்றுலாப் பகுதிகளில் உள்ள கடைகளில் பயணிகள் கூட்டத்தை அதிக அளவில் காணமுடிந்தது. கோடை விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் படகு இல்லத்தில் புதிதாக 10 படகுகளும், சுழலும் படகு ஒன்றும் சவாரிக்கு பயன்படுத்தப்படுகின்றன.

ஏற்காடு சுற்றுலாத் தலத்திற்கு சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 5 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து அலுவலா் தெரிவித்தாா்.

படகு இல்ல பூங்காவில் இயற்கை அழகை கண்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

படகு இல்ல பூங்காவில் இயற்கை அழகை கண்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.