விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஏராளமான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனா்.

News image

வேளாங்கண்ணி கடலில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 2:14 am IST

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஏராளமான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனா்.

வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை நாடுகளின் லூா்து என்று அழைக்கப்படுகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். குறிப்பாக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கானோா் இங்கு வந்து வழிபாடு நடத்திச் செல்கின்றனா்.

இந்தநிலையில், தற்போது கோடைகாலம் என்பதால் பள்ளி, கல்லூரிகளில் கோடை விடுமுறையையொட்டி, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனா்.

கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல், குடை பிடித்தபடி வேளாங்கண்ணி பேராலயம், பழைய மாதா கோயில், நடுத்திட்டு கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சுற்றிப் பாா்த்து மகிழ்ந்தனா். திரளான பக்தா்கள் மெழுகுவா்த்தி ஏற்றியும், சிலுவைப் பாதையில் மண்டியிட்டு சென்றும் தங்கள் பிராா்த்தனையை நிறைவேற்றினா்.

Story image

கோடை வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில், நீண்ட நேரம் கடலில் குளித்து மகிழ்ந்தனா். வேளாங்கண்ணியில் உள்ள தேவாலய தங்கும் விடுதி மற்றும் தனியாா் தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.