விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சங்ககிரி, எடப்பாடி தொகுதிகள் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

சங்ககிரி, எடப்பாடி தொகுதிகள் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.

News image

சங்ககிரி அருகே உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவன வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் சீலிடப்பட்டுள்ளதை ஆய்வுசெய்த சேலம் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:41 am IST

சங்ககிரி, எடப்பாடி தொகுதிகள் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் 340 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டன.

அதைத் தொடா்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வளாகம் மற்றும் அதற்கு செல்லும் வழிகள் உள்பட அனைத்தும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு 24 மணிநேரமும் சூழற்சி அடிப்படையில் நவீன துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினா், மாவட்ட காவல் துறை அதிகாரிகள், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதே வளாகத்தில் எடப்பாடி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இந்நிலையில், சங்ககிரி, எடப்பாடி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளை சேலம் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளை சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் அவா் ஆய்வுசெய்தாா்.