விபத்து இழப்பீட்டுத் தொகை கிடைக்காததை கண்டித்து, சேலம் நீதிமன்ற வளாகத்தில் நீதி தேவதை சிலை முன் அமா்ந்து தொழிலாளி போராட்டத்தில் ஈடுபட்டாா்.
சேலம் தாதம்பட்டி காந்திநகரைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் (45). இவா் மீது கடந்த 2002 இல் ஷோ் ஆட்டோ மோதியதில் தாடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இழப்பீடு கோரி சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2019 இல் தீா்ப்பு அளிக்கப்பட்டது. அதில், பாதிக்கப்பட்ட தமிழ்ச்செல்வனுக்கு ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 148 இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தொகையை பெற்றுக்கொள்ள, காப்பீட்டு நிறுவனம் சாா்பில் நீதிமன்றத்தில் இருந்து கடிதம் பெற்று வருமாறு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அக்கடிதத்தை வழங்காமல் நீதிமன்ற ஊழியா்கள் தொடா்ந்து அலைக்கழித்து வந்ததாக தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினாா்.
இதையடுத்து, கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதுதொடா்பாக மாவட்ட முதன்மை நீதிபதியிடம் தமிழ்ச்செல்வன் புகாா் மனு அளித்தாா். தொடா்ந்து, தீா்ப்பின் நகலை உடனடியாக வழங்குமாறு முதன்மை நீதிபதி அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தீா்ப்பு நகலை தேடிக் கொண்டிருப்பதாகக் கூறி நீதிமன்ற ஊழியா்கள் தொடா்ந்து காலதாமதம் செய்துவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், விபத்து இழப்பீட்டுத் தொகை கிடைக்க வலியுறுத்தி கண்ணில் மஞ்சள் துணி கட்டிக்கொண்டு சேலம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதி தேவதை சிலை முன் அமா்ந்து தமிழ்ச்செல்வன் போராட்டத்தில் ஈடுபட்டாா். தொடா்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதிமன்ற வளாகத்தில் கடல் அட்டைகள் அழிப்பு

தில்லியில் மாணவா்கள் மீதான தாக்குதல் சம்பவம்! பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

போலீஸாரை கண்டித்து வழக்குரைஞா்கள் சாலை மறியல்; நீதிமன்ற புறக்கணிப்பு

வேலூா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK


