பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

செல்போன் பயன்படுத்தியதைக் கண்டித்த தலைமையாசிரியர்: மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை!

பள்ளியில் செல்போன் பயன்படுத்தியதற்காக கண்டித்த விவகாரம்...

death

தற்கொலை - DIN

Published On :24 ஆகஸ்ட் 2026, 4:28 pm IST

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, பள்ளியில் செல்போன் பயன்படுத்தியதாகக் கூறி டி.சி. வாங்கிக் கொள்ளுமாறு ஆசிரியர்கள் எச்சரித்ததாகக் கூறப்படும் நிலையில், பிளஸ்-2 மாணவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககிரி தாலுகா கோனேரிப்பட்டி அக்ரஹாரம் வட்ராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் ராமகிருஷ்ணன் (18). இவர் செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 22-ம் தேதி பிற்பகல் 3.15 மணியளவில், ராமகிருஷ்ணனின் வகுப்பு ஆசிரியர் உமாநாத், அவரது பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தலைமை ஆசிரியர் அறைக்கு வருமாறு கூறியதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் பள்ளிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சீனு, ரவிசங்கர் உள்ளிட்டோர், ராமகிருஷ்ணன் பள்ளியில் செல்போன் பயன்படுத்தி புகைப்படம் எடுத்ததாகக் கூறி, அவரது செல்போனில் இருந்த புகைப்படங்களைப் பெற்றோரிடம் காட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், பள்ளியில் செல்போன் பயன்படுத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுவதாகவும் ஆசிரியர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ராமகிருஷ்ணனுக்கு டி.சி. வாங்கிக் கொள்ளுமாறு கூறியதாகவும், பெற்றோர் தங்கள் மகனை மன்னித்து, இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர், பெற்றோரிடம் எழுத்துப்பூர்வமாக கையெழுத்து பெற்றுக் கொண்டு, திங்கள்கிழமை பள்ளிக்கு வந்து டி.சி. பெற்றுச் செல்லுமாறு கூறி அனுப்பியதாகத் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் ராமகிருஷ்ணன் தனது பழைய வீட்டில் இருப்பதாக நினைத்து பெற்றோர் அங்குச் சென்றுள்ளனர்.

வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது வீட்டின் நடுப்பகுதியில் ராமகிருஷ்ணன் கயிற்றால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக கயிற்றை அறுத்து அவரை கீழே இறக்கியபோது, அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்ததாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ராமகிருஷ்ணனின் பெற்றோர் தேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தேவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மாணவரின் உயிரிழப்புக்கான காரணம் மற்றும் பள்ளியில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.