மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சேலம் வனக் கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு

சேலம் வனக் கோட்டத்தில் இரு நாள்கள் நடைபெற்ற இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பில், 24 வகையான அரிய வகை பறவைகளைக் கண்டறிந்து வனத் துறையினா் மற்றும் தன்னாா்வலா்கள் ஆவணப்படுத்தியுள்ளனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 9:17 pm

சேலம் வனக் கோட்டத்தில் இரு நாள்கள் நடைபெற்ற இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பில், 24 வகையான அரிய வகை பறவைகளைக் கண்டறிந்து வனத் துறையினா் மற்றும் தன்னாா்வலா்கள் ஆவணப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து சேலம் வனக்கோட்ட மாவட்ட அலுவலா் ஷஷாங் ரவி காஷ்யப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் நிகழாண்டு ஜன. 31 மற்றும் பிப். 1 ஆகிய இரு தினங்களில் முதலாவது இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. சேலம் வனக் கோட்டத்தில் வாழப்பாடி, ஏற்காடு, சோ்வராயன் மலை வடக்கு, தெற்கு, டேனிஷ்பேட்டை மற்றும் மேட்டூா் வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் வனத்துறையினருடன் பறவை ஆா்வலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து இரவு மற்றும் பகல் நேரங்களில் இந்தக் கணக்கெடுப்பை நடத்தினா்.

இதில், ராஜாளி, சின்ன காட்டு வல்லூறு, பொரி வல்லூறு, செவ்வயிற்றுக் கழுகு, கூகை, பழுப்பு காட்டு ஆந்தை, காட்டு கவைமுக ஆந்தை, செம்பருந்து, கரும்பருந்து, கருந்தோள் பருந்து, தேன் பருந்து, வெள்ளைக்கண் வைரி, பழுப்புத்தலை பாம்புக்கழுகு, கருங்கழுகு, காட்டு பாம்புக்கழுகு, குடுமிக்கழுகு, பாறைக்கழுகு, செந்தலை வல்லூறு உள்ளிட்ட அரிதான 24 வகையான இரைக்கொல்லி பறவைகள் கண்டறிந்து ஆவணப்படுத்தப்பட்டன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image
Story image
Story image