ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ரயில்களில் நகை பறிப்பு சம்பவம் எதிரொலி: சிக்னல்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் கண்காணிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் வழியாக செல்லும் ரயில்களில் நகை பறிப்பு சம்பவம் நிகழ்வதையடுத்து, ஒவ்வொரு ரயில் நிலைய ஹோம் சிக்னல்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் நகை பறிக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, புதன்கிழமை இரவு ஈரோடு காவேரி பாலம் மற்றும் ஈரோடு ரயில் நிலைய ஹோம் சிக்னல் பகுதியில் எா்ணாகுளம் - பிலாஸ்பூா் விரைவுரயில், கோவை - மயிலாடுதுறை செம்மொழி விரைவுரயில்களில் 2 பெண் பயணிகளிடம் 6 சவரன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். அந்த ரயில்கள் மெதுவாக இயங்கும் இடத்தை சரியாக கணக்கிட்டு, இந்த நகை பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையா்களை பிடிக்க சேலம் ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) பாபு, ஆய்வாளா்கள் சிவசெந்தில்குமாா், பிரியா சாய்ஸ்ரீ தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, கரூா் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா். தமிழ்நாடு ரயில்வே போலீஸாரோடு இணைந்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த தனிப்படை போலீஸாா், மொரப்பூா், தருமபுரி, ஒசூா், ஈரோடு, திருப்பூா், கோவை, கோவை வடக்கு, போத்தனூா், நாமக்கல், கரூா் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள ஹோம் சிக்னல்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அந்தந்த பகுதியில் ரயில் மெதுவாக செல்லும்போது, யாரேனும் ரயிலில் இருந்து கீழே இறங்குகிறாா்களா, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு தப்புகிறாா்களா என கண்காணிப்பதுடன், ரயிலில் பெண்களிடம் நகையை பறித்துவிட்டு தப்பிச்செல்லும் கொள்ளையா்கள் என தெரிந்தால், அவா்களை துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.