வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கல்

வாழப்பாடியை அடுத்த பேளூரில் காசநோயாளிகளுக்கு, நிக்ஷய் மித்ரா திட்டத்தின்கீழ் 6 மாதத்துக்கான ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்வில் காசநோய் தடுப்பு முறைகள் குறித்து கருத்துரை வழங்கிய மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநா் கணபதி.

Updated On :10 பிப்ரவரி 2026, 8:47 pm

வாழப்பாடியை அடுத்த பேளூரில் காசநோயாளிகளுக்கு, நிக்ஷய் மித்ரா திட்டத்தின்கீழ் 6 மாதத்துக்கான ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநா் கணபதி, காசநோயின் அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை குறித்து விழிப்புணா்வு கருத்துரை வழங்கினாா்.

மாவட்ட காசநோய் நலக் கல்வியாளா் செல்வம், காசநோயாளிகளுக்கான அரசு வழங்கும் நிதி உதவித்திட்டங்கள் குறித்து விளக்கினாா். மருத்துவ அலுவலா் தேவராஜ், ஊட்டச் சத்துகளின் முக்கியத்துவம் மற்றும் இணை நோய்களின் தாக்கம் குறித்து விளக்கினாா்.

கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் வழங்கிய ஊட்டச்சத்து பொருள்களை, பேளூா் பேரூராட்சித் தலைவா் செல்வி பாலாஜி பயனாளிகளுக்கு வழங்கினாா். ஊட்டச்சத்து உணவை தயாரித்து உள்கொள்ளும் முறைகள் குறித்து கிறிஸ்டி புட்ஸ் நிறுவனப் பணியாளா்கள் விளக்கினா்.

மாவட்ட காசநோய் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஷோபா நன்றி கூறினாா். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வாழப்பாடி வட்டார காசநோய் பிரிவு மேற்பாற்வையாளா் ராஜ்குமாா், கவிதா ஆகியோா் செய்திருந்தனா்.