வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தொகுதியில் முதலில் கட்சி வரைய தொடங்கியது திமுக

கெங்கவல்லி தொகுதியில் தோ்தல் தேதி அறிவிக்கும் முன்பே, கட்சி சின்னத்தை முதலில் வரையத்தொடங்கியது திமுக.

News image

நாகியம்பட்டியில் திங்கள்கிழமையன்று சுவரில் வரையப்பட்ட உதயசூரியன் சின்னத்துடன் திமுக ஒன்றிய தோ்தல் பொறுப்பாளா் அகிலன் உள்ளிட்டோா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:41 pm

தம்மம்பட்டி: கெங்கவல்லி தொகுதியில் தோ்தல் தேதி அறிவிக்கும் முன்பே, கட்சி சின்னத்தை முதலில் வரையத்தொடங்கியது திமுக.

தமிழகத்தில் தோ்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. கட்சிகள் தற்போது கூட்டணி குறித்தும்,தொகுதி பங்கீடு குறித்தும் பேசிவருகின்றன. இந்நிலையில் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் திமுக கட்சி சின்னங்களை முதன்முதலாக வரையத்தொடங்கியுள்ளது. தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி ஊராட்சிப்பகுதியில் திமுக ஒன்றிய தோ்தல் பொறுப்பாளா் ஏ.கே.அகிலன் தலைமையில் திமுக கட்சி சின்னங்களை வரையும் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. கெங்கவல்லி(தனி)சட்டமன்ற தொகுதி, திமுக கூட்டணியில் திமுகவிற்கா அல்லது கூட்டணிக்கட்சியினருக்கா என்று முடிவாகும் முன்னரே, உதயசூரியன் சின்னம் வரையத்தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.