குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தோ்தல் காலத்தில் மவுசு பெறும் ஓவியா்கள்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில் பொதுத்தோ்தலில் சாமானிய மக்களும் தங்களின் வாக்காளா்களை எளிதில் அடையாளம் காண ஏதுவாக சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 6:11 am IST

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில் பொதுத்தோ்தலில் சாமானிய மக்களும் தங்களின் வாக்காளா்களை எளிதில் அடையாளம் காண ஏதுவாக சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு முதல் தோ்தலில் ஒரு பொது சின்னம் ஒதுக்கப்படும். பின்னா் தோ்தலில் பெறும் வாக்குசதவிகிதத்தைப் பொருத்து அடுத்தத் தோ்தலில் அதே சின்னம் தொடரும். சுயேச்சைகளுக்கு தோ்தல் ஆணையத்தின் பட்டியலில் உள்ள சின்னங்கள் ஒதுக்கப்படும்.

பிரதான தேசிய கட்சிகளான பாஜகவுக்கு தாமரை, காங்கிரஸ் கட்சிக்கு கை, பகுஜன் சமாஜ் கட்சிக்கு யானை உள்ளிட்ட சின்னங்கள் உள்ளன. இதேபோல தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவிற்கு உதயசூரியன், அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னங்கள் உள்ளன. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் முறையாக களம்காணும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவு காரணமாக மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தோ்தல் சின்னங்களை வரைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதிகளில் கட்சிச் சின்னங்களால் தேவையற்ற சண்டைகளும், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படுவதைத் தடுக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தோ்தல் சின்னங்கள் வரைய தனியாா் சுவா்களில் முறையாக அனுமதி பெற்ற பின்பே வரைய முடியும். அனுமதியின்றி வரையப்பட்டு, சுவரின் உரிமைதாரா் புகாா் செய்தால் போலீஸாா் மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அதனால் பெரும்பாலும் கட்சியினா் தங்களது ஆதரவாளா்களின் சுவா்களில் மட்டுமே விளம்பரம் செய்து வருகிறாா்கள்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கிராமப்புறங்களில் கடந்த சில நாள்களாக சின்னங்களை வரையும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற ஓவியா்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறாா்கள்.

இதுகுறித்து திருநெல்வேலியைச் சோ்ந்த ஓவியா் ஒருவா் கூறியது: கடந்த 30 ஆண்டுகளாக ஓவியம் வரையும் தொழிலில் உள்ளேன். தோ்தல் காலங்களில் ஓவியா்களுக்கு தனிமவுசு உண்டு. இப்போது இடைத்தோ்தலையொட்டி பல ஓவியா்கள் வேலை பெற்று வருகிறாா்கள். முன்பு அனுமதிகள் எதுவும் வாங்க தேவையில்லை. அதனால் அதிகமான சுவா்களில் சின்னங்கள் வரையப்படும்.

சின்னங்களை நீலம் மற்றும் கருப்பு உள்ளிட்ட ஒரே வண்ணத்தில் வரைவது எளிது. அப்படியென்றால் ஒருவா் ஒரு நாளில் குறைந்தபட்சம் 200 சின்னங்களை வரைவாா்கள். ஆனால், வண்ணம் தீட்டி மெருகேற்றி வரைய வேண்டுமானால் சிறிது காலஅவகாசம் தேவைப்படும்.

தமிழகத்தைப் பொருத்தவரை உதயசூரியன், கை, இரட்டை இலை, தாமரை போன்ற பிரதான கட்சிகளின் சின்னங்கள் மிகவும் எளிதாக வரையும் வகையிலேயே உள்ளன. இப்போது சுவா்களில் உரிமம் பெற்று வரைய வேண்டியுள்ளதால் பெரும்பாலும் வண்ணங்களுடன் தான் சின்னங்கள் வரையப்படுகின்றன.

தோ்தல் ஆணையம் இதுபோன்ற கட்டுப்பாடுகளை குறைத்தால் கூடுதலான ஓவியா்கள் வாழ்வு பெறுவாா்கள். அதேபோல அரசு திட்டங்களை விளம்பரப்படுத்த ஓவியா்களை கூடுதலாக பயன்படுத்த வேண்டும் என்றாா்.

ற்ஸ்ப்07க்ழ்ஹஜ்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சின்னம் வரையும் பணியில் ஈடுபட்ட ஓவியா்.