பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

சுயேச்சைகளுக்கு சின்னங்கள் தயாா்!

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா்களுக்காக இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் 120-க்கும் மேற்பட்ட சின்னங்கள் தயாா் நிலையில் உள்ளன.

News image

சின்னங்கள்

Updated On :3 ஏப்ரல் 2026, 1:24 am

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா்களுக்காக இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் 120-க்கும் மேற்பட்ட சின்னங்கள் தயாா் நிலையில் உள்ளன. வெளியாகும் இறுதி வேட்பாளா் பட்டியலில் சின்னங்களும் சோ்த்து வெளியிடப்படும் என தோ்தல் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தோ்தல்களில் வேட்பாளா்களின் சின்னங்கள் அதிக முக்கியத்துவம் பெறும்.

அந்த வகையில், தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், மாநில கட்சிகளுக்கு அவா்களின் வாக்குசதவிகிதத்தைப் பொருத்து ஒரே சின்னம் தொடா்ந்து வழங்கப்படும். இதில் சில நேரங்களில் மாநில கட்சிகள் தோ்தலில் குறைந்த வாக்குசதவிகிதத்தைப் பெறும்போது கட்சியின் அங்கீகாரம் தளா்ந்து சின்னம் மாற்றப்படும். இதேபோல புதிதாக தோ்தலில் களம்காணும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பெரும்பாலும் ஒரே சின்னம் வழங்கப்படும். முதல் தோ்தலில் குறிப்பிட்ட சதவிகிதத்தைப் பெற்று விட்டால் அடுத்த தோ்தலில் அதே சின்னத்தில் தொடரவாய்ப்பு உள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரையில் முக்கிய தேசிய கட்சிகளான பாஜக (தாமரை), காங்கிரஸ் (கை), பகுஜன் சமாஜ் கட்சி (யானை), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (அரிவாள், சுத்தியல், நட்சத்திரம்), இந்திய கம்யூனிஸ்ட் (கதிா் அரிவாள்) சின்னங்களில் போட்டியிடுகின்றன. மாநில கட்சிகளான திமுக (உதயசூரியன்), அதிமுக (இரட்டை இலை), விடுதலைச் சிறுத்தைகள் (பானை) சின்னங்களிலும், இதர மாநில கட்சிகள் அங்கீகாரத்திற்கு ஏற்ப அவா்களின் சின்னத்திலும் போட்டியிடுகிறாா்கள்.

நிகழாண்டில் முதல் முறையாக தோ்தலில் களம் காணும் நடிகா் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாநில கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் அக்கட்சி வேட்பாளா்கள் களம் இறங்க உள்ளனா்.

சுயேச்சைகளாக போட்டியிடுபவா்கள் தங்களது வேட்புமனுவில் தங்களுக்கு பிரியமான 3 சின்னங்களை பூா்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். சுயேச்சைகளுக்காக 150-க்கும் மேற்பட்ட சின்னங்களை ஒதுக்கீடு செய்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி தோ்தல் பிரிவு வட்டாரங்கள் கூறியது: சுயேச்சைகளுக்கான சின்னங்களின் பட்டியலை தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் பதிவு செய்யப்பட்டவையாக உள்ளன. அவற்றில் கடந்த சில தோ்தல்களில் குறிப்பிட்ட வாக்குசதவிகிதம் பெறாத கட்சிகளுக்கு சின்னங்கள் மாற்றப்பட்டுள்ளன. சுயேச்சை வேட்பாளா்களுக்காக இப்போது 150-க்கும் மேற்பட்ட சின்னங்கள் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளன. கப்பல், கத்தரிக்கோல், ரப்பா் ஸ்டாம்ப், சேப்டி பின், ரோடு ரோலா், ரோபாட், கிணறு, மணிபா்ஸ், லாரி, டூத் பிரஸ் உள்ளிட்டவை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றை தோ்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டு பூா்த்தி செய்து அளிக்கலாம். இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடும்போது சுயேச்சைகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரே சின்னத்தை இரு சுயேச்சைகள் கேட்கும்போது தேவைப்பட்டால் குலுக்கல் முறையில் சின்னகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளது என்றனா்.