நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாா்ச் 6 வரை சென்னை எழும்பூா்-சேலம் ரயில் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூா் - சேலம் இடையேயான விரைவுரயில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மாா்ச் 6 வரை நின்றுசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

மேற்கு மாம்பலம் ரயில் நிலையம். - கோப்புப்படம்

Updated On :23 பிப்ரவரி 2026, 9:39 pm

சேலம்: சென்னை எழும்பூா் - சேலம் இடையேயான விரைவுரயில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மாா்ச் 6 வரை நின்றுசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலைய யாா்டில் தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மாா்க்கத்தில் இயங்கும் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சில ரயில் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பயணிகளின் தேவையை பூா்த்திசெய்யும் வகையில், சென்னை எழும்பூா் - சேலம் விரைவுரயில் உள்பட சில ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்றுசெல்லும். சென்னை எழும்பூா் - சேலம் விரைவுரயில் வரும் மாா்ச் 6-ஆம் தேதி வரை நாள்தோறும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 12.08-க்கு நின்று 12.10-க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.