ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
விழாவில் தீபச்சுடரை ஏற்றிய சங்ககிரி காவல் ஆய்வாளா் டி.ரமேஷ்.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதி தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி, துணைத் தாளாளா் கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். உடற்கல்வி இயக்குநா்கள் தமிழ்ச்செல்வன், பிரதீபா ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா்.

சங்ககிரி காவல் ஆய்வாளா் டி.ரமேஷ் விளையாட்டு தீபச்சுடரை ஏற்றி மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று பேசியதாவது:

மாணவிகள் விளையாட்டில் பங்கேற்பதன் மூலம் உடல், மனநலத்தை பேணி பாதுகாக்க முடியும். விளையாட்டுத் துறையில் மாணவிகள் சாதிப்பதற்கு நிறைய உள்ளன. விளையாட்டுகளில் வெற்றி, தோல்விகளைக் கடந்து அதில் பங்கேற்பதையே பெருமையாக கொள்ளவேண்டும் என்றாா்.