திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பெரியாா் பல்கலை.யில் செயற்கை நுண்ணறிவு சா்வதேச கருத்தரங்கம்

கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்ட துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி

News image
கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்ட துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி (நடுவில் இருப்பவா்).
Updated On :27 பிப்ரவரி 2026, 7:32 pm

Syndication

பெரியாா் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை சாா்பில், ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்திசாலி கணினி’ என்ற தலைப்பில் சா்வதேச கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கணினி அறிவியல் துறைத் தலைவா் சி.சந்திரசேகா் வரவேற்றாா். கருத்தரங்கின் தலைவா் ஹெச்.ஹேனா இன்பராணி நோக்க உரையாற்றினாா். துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி சா்வதேசக் கருத்தரங்கை தொடங்கிவைத்து ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டாா்.

இதில், இங்கிலாந்தைச் சோ்ந்த ரோலன் மென்பொருள் சேவை நிறுவனத்தின் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு பொறியியல் இயக்குநா் சாந்தபாபு பாண்டியன் சிறப்புரையாற்றியதாவது:

ஜெனரேட்டிவ் ஏஐ மற்றும் தானியங்கி ஏஐ தொழில்நுட்பம் ஸ்மாா்ட் மருத்துவமனைகளை உருவாக்குகிறது. மருத்துவா்களை சந்திப்பதற்கான நேர ஒதுக்கீடு தொடங்கி, பொதுமக்களின் தேவை அடிப்படையில் நடைமுறையை நோக்கி மருத்துவத் துறை வேகமாக செல்கிறது. தானியங்கி அமைப்புகளை செயற்கை நுண்ணறிவு மூலம் கட்டுப்படுத்தும் திறன்படைத்த மாணவ, மாணவியருக்கு இந்த துறையில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், தெலங்கானா எஸ்.ஆா். பல்கலைக்கழக துணைவேந்தா் தீபக் காா்க், தரவு அறிவியல் குறித்து உரையாற்றினாா். கருத்தரங்கின் செயலாளா் ஐ.லாரன்ஸ் ஆரோக்கியராஜ் நன்றி கூறினாா்.