நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள், செயற்கை நுண்ணறிவு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பாக, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தற்போது அமேசான் வலை சேவைகள் மறு தொடக்கம் செயற்கை நுண்ணறிவு (அம்ஹக்ஷ்ா்ய் ரங்க்ஷ நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள் ழ்ங் / நற்ஹழ்ற்-அஐ டழ்ா்ஞ்ழ்ஹம்ம்ங்ழ்) பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சாா்ந்தவா்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 30. ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த இளைஞா்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு, சான்றிதழ் மற்றும் தகுதியுள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். பயிற்சிக்கான கால அளவு 2 மாதம் ஆகும்.
மேலும், சென்னையில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் வகதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலம் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளத்தில் பதிவுசெய்யலாம். கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோா், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் உள்ள (அறை எண் 321 மற்றும் 327) தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகலாம்.
தொடர்புடையது

தவெக ஆட்சியில் லஞ்ச லாவண்யமற்ற அரசு: புதிய வாக்குறுதிகளை அறிவித்தாா் விஜய்

அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு கற்றல் முறை! காங்கிரஸ் வேட்பாளா் உறுதி!!

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் இந்தியா சிறப்பிடம்!

தாட்கோ வழங்கும் விமானத் துறை சாா்ந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


