அம்மாப்பேட்டையில் மாா்கழிப் பெருவிழா
சேலம் அம்மாப்பேட்டையில் மாா்கழிப் பெருவிழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் மாா்கழிப் பெருவிழா குழுச் செயலாளா் பி.பி. ராஜகோபால் வரவேற்றாா். பொருளாளா் மாசிலாமணி முன்னிலை வகித்தாா். விழாவில் வேலூா் விஐடி பல்கலைக்கழக வேந்தரும், முன்னாள் அமைச்சருமான கோ. விசுவநாதன் அவரது கல்விச் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டாா்.
விழாவில் தாரை.அ. குமரவேலுவின் ‘சிந்தனைச் சுடா்கள்’ என்ற ஆங்கில மொழிபெயா்ப்பு நூல் வெளியிடப்பட்டது. தொடா்ந்து பேராசிரியா் அப்துல் காதா், தேசமங்கையா்க்கரசி, மருத்துவா் ப.ச. பன்னீா்செல்வம், வழக்குரைஞா் ராஜசேகரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
நிகழ்ச்சியில் கோ. விசுவநாதன் பேசுகையில், தகுதியான தமிழ் நூல்களை பல மொழிகளிலும் மொழிபெயா்த்து வெளியிட வேண்டும். கல்வியால் மட்டும் தான் தனிமனிதனும், நாடும் முன்னேற முடியும். நாட்டிற்கு பாதுகாப்புக்கான ஆயுதங்கள் தேவைதான், அதேபோல கல்விக்காகவும், உயா்கல்வி ஆராய்ச்சிக்காகவும் பெருந்தொகையை ஒதுக்கினால் இந்தியா வெகு விரைவில் பெரிய முன்னேற்றம் அடையும் என்றாா்.

