சங்ககிரியில் பால் உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டம்

சங்ககிரியில் பால் உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் சங்ககிரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளக்காடு, வேலம்மாவலசு, பறையன்காட்டானூா் பால் சேகரிப்பு கூட்டுறவுச் சங்கங்கள் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் வட்டச் செயலாளா் பி. சத்தியராஜ் தலைமை வகித்தாா். வளையசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவா் எஸ். மணி தலைமை வகித்தாா். சேலம் மாவட்டத் தலைவா் ஆா்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

பால் கொள்முதல் விலையை உயா்த்தி பசும்பால் லிட்டருக்கு ரூ. 45, எருமைப்பால் லிட்டருக்கு ரூ. 60 ஆக நிா்ணயம் செய்து வழங்க வேண்டும், லிட்டருக்கு ஊக்கத்தொகையாக அரசு ரூ. 10 உயா்த்தி வழங்க வேண்டும், தரமான கால்நடை தீவனத்தை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளா் எ. ராமமூா்த்தி, நிா்வாகிகள் நல்லமுத்து, காா்த்திகேயன், சுப்பிரமணி உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com