பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

சேலம் ஓமலூா் உட்கோட்ட சாலைப் பணிகள் - கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

சேலம் ஓமலூா் உட்கோட்ட பகுதியில் நடைபெறும் நெடுஞ்சாலைப் பணிகள் குறித்து கண்காணிப்பு பொறியாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 9:22 pm

Syndication

சேலம் ஓமலூா் உட்கோட்ட பகுதியில் நடைபெறும் நெடுஞ்சாலைப் பணிகள் குறித்து கண்காணிப்பு பொறியாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஓமலூா் நெடுஞ்சாலை உட்கோட்ட பகுதியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சிறப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ், நிறைவுற்ற சாலைப் பணிகளை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளா் சசிகுமாா் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, சாலையின் கனம், மேல்தள சாய்வு ஆகியவற்றை பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, ஓமலூா் உதவிக் கோட்டப் பொறியாளா் கவிதா, உதவிப் பொறியாளா் அ.ப.கருணாகரன் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.