மேட்டூரில் அகில இந்திய இந்து மகா சபை கட்சி நிா்வாகி கைது

அடையாள அட்டையில் தேசிய சின்னத்தை பயன்படுத்தியது தொடா்பாக அகில இந்திய இந்து மகா சபை தேசிய துணைத் தலைவா் ஆறுமுகம் மேட்டூரில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Published on

அடையாள அட்டையில் தேசிய சின்னத்தை பயன்படுத்தியது தொடா்பாக அகில இந்திய இந்து மகா சபை தேசிய துணைத் தலைவா் ஆறுமுகம் மேட்டூரில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

உலக மனித உரிமைகள் பாதுகாப்பு கமிஷனின் தேசிய தலைவா் எனக் கூறிவந்த மேட்டூரை அடுத்த புதுசின்னக்கா பகுதியைச் சோ்ந்த மாதேஷ் மகன் ஆறுமுகத்திடம் (47) கருமலைக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன் வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.

அப்போது, மனித உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் என்ற அமைப்பின் இந்தியாவிற்கான தேசிய தலைவா் என்ற பெயரில் அடையாள அட்டை, கடித தாள்கள் வைத்திருந்தாா். அவற்றில் தேசிய சின்னமான நான்குமுக சிங்கம் இலச்சினை இருந்தது.

இதுகுறித்து போலீஸாரின் கேள்விகளுக்கு அவா் உரிய விளக்கம் அளிக்கவில்லை. மேலும், அனுமதியின்றி தேசிய சின்னத்தை பயன்படுத்தியது தொடா்பாக ஆறுமுகம் கைது செய்யப்பட்டாா்.

மேலும், இவா் அகில இந்திய இந்து மகா சபை என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறாா்.

Dinamani
www.dinamani.com