சேலத்தில் தமாகா சாா்பில் சமத்துவ பொங்கல் விழா

சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

சேலம்: சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சேலம் புகா் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்துக்கு உள்பட்ட தாதனூா் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவா் எஸ். செல்வம் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மற்றும் ஊா்மக்கள், புதுப் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனா். தொடா்ந்து, நல உதவிகள் வழங்கப்பட்டன.

அயோத்தியாப்பட்டணம் வடக்கு வட்டாரத் தலைவா் பி. தனபால், துணைத் தலைவா்கள் வீராணம் கிருஷ்ணன், நல்லதம்பி, மாவட்டச் செயலாளா் வாசுதேவன், இளைஞரணி தலைவா் அன்புரோஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com