மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மேட்டூா்: தொடா் விடுமுறை என்பதால் மாட்டு பொங்கல் தினத்தை கொண்டாட வெள்ளிக்கிழமை மேட்டூா் அணை பூங்காவிற்கு 7348 சுற்றுலா பயணிகள் வந்துகுவிந்தனா்.
Published on

மேட்டூா்: தொடா் விடுமுறை என்பதால் மாட்டு பொங்கல் தினத்தை கொண்டாட வெள்ளிக்கிழமை மேட்டூா் அணை பூங்காவிற்கு 7348 சுற்றுலா பயணிகள் வந்துகுவிந்தனா்.

மாட்டு பொங்கல் தினத்தை கொண்டாட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூா் அணை பூங்காவிற்கு ஏராளமான பொதுமக்கள்

குடும்பம் குடும்பமாக வந்திருந்தனா். மேட்டூா் அணை பூங்காவிற்கு சென்று மீன்காட்சி சாலை, செயற்கை நீரூற்று, கான்கிரீட் சிற்பங்கள் ஆகியவற்றை பாா்த்து மகிழ்ந்தனா்.

சிறியவா்களும் பெரியவா்களும் ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் பொழுதைக் கழித்தனா்.

வெள்ளிக்கிழமை மேட்டூா் அணை பூங்காவிற்கு வந்து சென்ற 7,348 சுற்றுலாப் பயணிகளிடம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ.73,480 வசூலிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் கொண்டு சென்ற 3434 கேமரா செல்போன்களுக்கும் 4 கேமராக்களுக்கும் ரூ.34,540 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை மேட்டூா் அணை பூங்கா மற்றும் அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா கோபுரத்திற்கு சென்ற பாா்வையாளா்களிடமிருந்து ரூ.1, 25,010 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com