பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மகுடஞ்சாவடியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்

News image
‘நலம்  காக்கும்  ஸ்டாலின்’ மருத்துவ  முகாம்.- (கோப்புப் படம்)
Updated On :24 ஜனவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

மகுடஞ்சாவடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் மாவட்ட சுகாதார அலுவலா் சவுண்டம்மாள், மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் அன்பழகன், வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் கண்ணன், ஒன்றிய துணைச் செயலாளா் கதிரவன், பொருளாளா் புஷ்பநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இம் முகாமில் மகப்பேறு மருத்துவம், ரத்த அழுத்தம், கா்ப்பிணிகளுக்கு அல்ட்ரா ஸ்கேன், இ.ஜி.சி. எக்கோ உள்ளிட்ட அதிநவீன கருவிகளைக் கொண்டு மருத்துவா்கள் மற்றும் மருத்துவக் குழுவினரால் பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் 870 போ் கலந்துகொண்டனா்.