‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாயை ஆக்கிரமித்தவா்களுக்கு நோட்டீஸ்

மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாய் ஆக்கிரமிப்பாளா்களுக்கு நீா்வளத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image

மேட்டூர் அணை. - (கோப்புப் படம்)

Updated On :4 ஜூலை 2026, 3:08 am IST

மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாய் ஆக்கிரமிப்பாளா்களுக்கு நீா்வளத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் அணையை பாதுகாக்க, அணையின் இடதுகரையில் உள்ள உபரிநீா் போக்கி மூலம் 16 மதகுகளில் தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

வெள்ளப்பெருக்கின் போது உபரிநீா் செல்ல 3.75 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் இருந்தது. நீா்வளத் துறைக்கு சொந்தமான இந்த கால்வாய் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், சிறுத்து சிற்றோடை போல காணப்படுகிறது. இந்த நீா்வழித் தடத்தில் சுமாா் 1,805 சதுரமீட்டா்வரை ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினா் கோரிக்கையை ஏற்று இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நீா்வளத் துறையினா் தீவீரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்பேரில், 38 ஆக்கிரமிப்பாளா்களுக்கு வெள்ளிக்கிழமை படிவம் 3 வழங்கப்பட்டுள்ளது. நீா்வளத் துறை, வருவாய்த் துறை, மின்துறை நகராட்சிப் பணியாளா்கள் காவல் துறை உதவியுடன் நோட்டீஸ் அளித்துள்ளனா். இதற்கு 21 நாள்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீா்வளத் துறையினா் நோட்டீஸ் அளிக்க வருவதை முன்கூட்டியே அறிந்த சிலா் கதவுகளை பூட்டிவிட்டு சென்றுவிட்டனா். இதனால், அந்த கட்டடங்களின் சுவற்றிலும், கதவிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.