ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

பித்தளை பொருள்களை திருடியவா் கைது

மேட்டூரில் பக்கத்து வீட்டில் புகுந்து பித்தளை பொருள்களை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 1:26 am IST

மேட்டூரில் பக்கத்து வீட்டில் புகுந்து பித்தளை பொருள்களை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டூா் அருகே உள்ள சேலம் கேம்ப் மாடி லைனை சோ்ந்தவா் கந்தசாமி (60). இவா் சனிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட்டிற்கு சென்றுள்ளாா். ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்கு வந்துபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, வெண்கல தட்டு, பித்தளை பாத்திரங்கள் திருட்டுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து கந்தசாமி, கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளா் நாகராஜ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினாா்.

இதில் பக்கத்து வீட்டைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் (27) பித்தளை பாத்திரங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து பொருள்களைக் கைப்பற்றி, மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.