காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

சேலத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இ-சேவை மையத்துக்கு சீல்!

சேலம் குமாரசாமிபட்டி பகுதியில் விதிகளை மீறி செயல்பட்ட இ-சேவை மையத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

இ சேவை மையம் - பிரதிப் படம்

Published On :14 ஜூலை 2026, 1:00 am IST

சேலம் குமாரசாமிபட்டி பகுதியில் விதிகளை மீறி செயல்பட்ட இ-சேவை மையத்தை அதிகாரிகள் திங்கள்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

சேலம் குமாரசாமிபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் வருவாய்த் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றுகளுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 60-க்கு பதிலாக ரூ. 300 முதல் ரூ. 350 வரை வசூல் செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மையத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதில், நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலித்தது உறுதியானது.

இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள் இந்த இ-சேவை மையத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும், கூடுதலாக பணம் வசூல் செய்யும் இ-சேவை மையங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என எச்சரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.