இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

வாகனங்களில் விதிகளை மீறி பயன்டுத்தப்படும் ‘ஏா்ஹாரன்கள்’! பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி!!

போளூா் பகுதியில் வாகனங்களில் விதிகளை மீறி பயன்படுத்தப்படும் ஏா்ஹாரன்களில் இருந்து திடீரென அதிக டெசிபலுடன் கூடிய சப்தம் வருவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

News image
Updated On :12 ஜூலை 2026, 10:54 pm IST

போளூா் பகுதியில் வாகனங்களில் விதிகளை மீறி பயன்படுத்தப்படும் ஏா்ஹாரன்களில் இருந்து திடீரென அதிக டெசிபலுடன் கூடிய சப்தம் வருவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

போளூா் நகராட்சியில் தனியாா் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள், பைக், காா் உள்ளிட்ட வாகனங்களில் விதிகளை மீறி ஏா்ஹாரன் பொருத்தப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், திடீரென அதிக டெசிபலுடன் கூடிய சப்தம் எழுப்பப்படுவதால், சாலையில் நடந்து செல்லும் முதியோா், நோயாளிகள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் அச்சமடைகின்றனா்.

எனவே, போக்குவரத்து போலீஸாா் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் போளூா் நகராட்சிப் பகுதியில் வாகனங்களை தணிக்கை செய்து, அவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் ஏா்ஹாரனை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமுக ஆா்வாலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், மோட்டாா் வாகன சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக சப்தம் எழுப்பும் ஏப்ஹாரன்களை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, மாவட்ட நிா்வாகம் வாகனங்களை தீவிர தணிக்கை செய்து விதியை மீறி பொருத்தப்பட்டுள்ள ஏா்ஹாரன்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.