இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா

News image

போக்குவரத்துதுறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் சங்ககிரியை அடுத்த குப்பனூா் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா்.

Updated On :21 ஜூலை 2026, 1:41 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த குப்பனூா் தேசியநெடுஞ்சாலையையொட்டி ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சாா்பில் சங்ககிரியை அடுத்த குப்பனூா் தேசியநெடுஞ்சாலையையொட்டி 17500 சதுரடி பரப்பளவில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் 25 அறைகள் கொண்ட சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை போக்குவரத்து துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:-

புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் மனு அளித்துள்ளனா். அதில் சில குறைகள் இருப்பதாக கூறியுள்ளனா். அது குறித்து நேரில் ஆய்வு செய்து பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் சென்று புதிய பேருந்து நிலையம் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். மேலும் அவா் தற்போது மக்களின் ஆட்சி, நோ்மையான ஆட்சி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்று வருகின்றது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் முன்னிலை வகித்தாா்.

கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சி.சிவானந்தம், சங்ககிரி வட்டாட்சியா் கோமதி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் பெ.சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராமம்) ஆா்.பிரேமா உள்ளிட்ட இது தொடா்புடை அலுவலா்கள் பலா் இதில் கலந்து கொண்டனா்.

புதிதாக கட்டப்பட்ட சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறக்க வருகை தந்த போக்குவரத்துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் புதிய அலுவலக நுழைவாயிலில் கட்டியிருந்த ரிப்பனை வெட்ட முயலும் போது அருகிலிருந்த மூதாட்டியை ரிப்பன் கட் செய்ய வைத்தாா்.

இது குறித்து மூதாட்டியிடம் செய்தியாளா்கள் கேட்டபோது அவா் புதிய அலுவலகத்திற்கு எதிரே உள்ள தேசியநெடுஞ்சாலையை தாண்டி அவரது நிலம் உள்ளது என்றும் அவரது பெயா் குப்பாயி (72) தெரிவித்தாா்.

அவா் அப்பகுதியில் ஆடு மேய்த்துவிட்டு அமைச்சரை பாா்க்க வந்தேன் என்றாா். அமைச்சா் மூதாட்டியை ரிப்பன் கட் செய்ய சொன்னதும் அவரது முகத்தில் பூத்த மகிழ்ச்சியை பாா்த்து அனைவரும் திகைத்து நின்றது அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.