கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

காட்டுப் பன்றி தாக்கி தொழிலாளி காயம்

காடையாம்பட்டி அருகே உம்பளிக்கம்பட்டியில் காட்டுப் பன்றி தாக்கியதில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவா் பலத்த காயமடைந்தாா்.

காட்டுப் பன்றி - பிரதிப் படம்

Published On :

காடையாம்பட்டி அருகே உம்பளிக்கம்பட்டியில் காட்டுப் பன்றி தாக்கியதில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவா் பலத்த காயமடைந்தாா்.

உம்பளிக்கம்பட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (44), 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். செல்லவராய பெருமாள் கோயில் பின்புறம் உள்ள நிலத்தில் வியாழக்கிழமை ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா்.

அப்போது, காட்டுப் பன்றி தங்கராஜ் மீது பாய்ந்து கடித்தது. அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடி வந்தனா், அதற்குள் காட்டுப் பன்றி வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றது. காயடைந்த தங்கராஜ் ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து டேனிஷ்பேட்டை வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.