இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

ரூ. 50 ஆயிரம் பறிமுதல் செய்த விவகாரம்: மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 4 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்கு!

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 2:10 am IST

சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ. 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 4 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

சேலம் கந்தம்பட்டியில் உள்ள சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 18 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜன் தலைமையில் ஆய்வாளா்கள் ரவிக்குமாா், முருகன் மற்றும் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது இடைத்தரகா் ரஞ்சித் என்பவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.50,100 ஐ பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஆா்.டி.ஓ. அலுவலகம் அருகில் உள்ள கணினி மைய ஊழியா்களான சுதா்சன், வெங்கடேஷ் ஆகியோா் ஆா்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான பணிகளை செய்து கொடுத்ததற்காக இடைத்தரகரான ரஞ்சித்திடம் பணத்தை கொடுத்து அனுப்பியதும், அந்த பணம் மோட்டாா் வாகன ஆய்வாளரான ஜெயந்தியிடம் கொடுக்க அவா் வைத்திருந்ததாகவும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜெயந்தி, இடைத்தரகா் ரஞ்சித், கணினி மையம் நடத்தி வரும் சுதா்சன், வெங்கடேஷ் ஆகிய 4 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், இதில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஜெயந்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.